சிவகாசி அருகே பட்டாசு வெடித்து விழுந்ததால் தீ விபத்து: கூரை செட் சேதம்

சிவகாசி அருகே பட்டாசு வெடித்து விழுந்ததால் தீ விபத்து: கூரை செட் சேதம்
X

பட்டாசு வெடித்ததால்  ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள். 

சிவகாசி அருகே பட்டாசு வெடித்து விழுந்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் கூரை ஷெட் சேதமடைந்தது.

சிவகாசி :

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் வாழைக்கிணறு வீதியைச் சேர்ந்தவர் டாக்டர் உமா (50). இவர் அதே பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறார். ஸ்டாண்டர்டு காலனியில் இவரது வீட்டின் அருகே கூரை செட் அமைத்திருந்திருக்கிறார். இன்று காலை அந்தப்பகுதியைச் சேர்ந்த சிலர் பட்டாசுகள் வெடித்துள்ளனர். அப்போது பட்டாசு வெடித்துச் சிதறி, அங்கிருந்த கூரைசெட் மீது விழுந்து, தீப்பிடித்து எரிந்தது.

இது குறித்து அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அதிகாரி பாலமுருகன் தலைமையில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கூரைசெட் எரிந்து பலத்த சேதமானது. தீப்பிடித்த கூரைசெட்டில் யாரும் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து திருத்தங்கல் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!