/* */

சிவகாசியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப்பணி: மேயர் ஆய்வு

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

HIGHLIGHTS

சிவகாசியில்  மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப்பணி: மேயர் ஆய்வு
X

சிவகாசி அருகே, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமானப் பணியை மேயர் சங்கீதா இன்பம் நேரில்  செய்தார்

விருதுநகர் மாவட்டம் , சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை, மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருத்தங்கல் பகுதியில் உள்ள சுக்கிரவார்பட்டி சாலையில் உள்ள பாலம் கட்டும் பணிகளை மேயர் ஆய்வு செய்தார். மேலும், 2வது வார்டு பகுதியில் உள்ள ஸ்டாண்டர்டு காலனியில் கட்டப்பட்டு வந்து, பாதியில் நிறுத்தப்பட்டுள்ள மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டியின் கட்டுமானப் பணியை பார்வையிட்ட மேயர், கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், வடக்கு ரத வீதியில் தார்சாலை மேம்படுத்தும் பணிகள், பழனிச்சாமி நாடார் வீதியில் கழிப்பறைகள், சாலைகளில் கல் பதிக்கும் பணிகள் மற்றும் 9-வது வார்டு, 10 -வது மற்றும் 20-வது வார்டு பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளையும் மேயர் நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது,துணை மேயர் விக்னேஷ்பிரியா, மண்டல தலைவர் குருசாமி, கவுன்சிலர்கள் செல்வம், சேதுராமன், சசிகுமார், கணேசன், துரைப்பாண்டி, பொன்மாடத்தி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.

குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசி 1920 ல் மூன்றாம் நிலை நகராட்சியாக செயல்பட்டது. 21/08/1978 இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும் 01/10/1978 ல் முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 1998ல் தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 2013ல் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் துறை சார்பில் 16.12.2021 -தேதி வெளியிடப்பட்ட அரசாணையில் சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகராட்சிகள் இணைந்து 21.10.2021 முதல் மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது.


Updated On: 5 April 2023 10:30 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    ஆதரவற்ற மாணவர்களுக்காக திருச்சி ஸ்ரீரங்கத்தில் இறகுகள் அகாடமி
  2. நாமக்கல்
    வெண்ணந்தூர் பகுதியில் கிராம சாலைகள் அமைக்கும் பணி: ஆட்சியர் உமா
  3. கரூர்
    கரூர் மாவட்டத்தில் கழிவு செய்யப்பட்ட காவல் துறை வாகனங்கள் 24ம் தேதி...
  4. ஈரோடு
    நாப்கின்களை கொண்டு மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு படத்தை உருவாக்கி...
  5. திருவெறும்பூர்
    குவைத் தீ விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் அன்பில்...
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் வேலைக்கு செல்லும் மகளிருக்கு விடுதி அமைக்க இடம் தேர்வு
  7. அரசியல்
    ‘நான் செத்துட்டேன்’ லால்குடி திமுக எம்எல்ஏ செளந்தரபாண்டியன் திடீர்...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே தென்கரையில் டி.ஆர். மகாலிங்கத்துக்கு நூற்றாண்டு...
  9. திருவள்ளூர்
    பெரியபாளையம் பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை: எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வந்த அதிமுகவினர் போலீசாருடன்...