சிவகாசியை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்க எம்.பி. வலியுறுத்தல்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியில் விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
சிவகாசி நகரின் மீது, நாட்டின் பிரதமருக்கும் ஒன்றிய நிதியமைச்சருக்கும் ஏன் இவ்வளவு கோபம் என்று தெரியவில்லை என்றார் விருதுநகர் மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியில், விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
சிவகாசி, அம்மன்கோவில்பட்டி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பள்ளி மாணவர்களுக்கு இருக்கை வசதி இல்லாததால் தரையில் அமர்ந்திருந்தனர். இது குறித்து அறிந்த மாணிக்கம் தாகூர், தனது நிதியிலிருந்து மாணவர்களுக்கு தேவையான இருக்கை வசதிகளை செய்து தருவதாக உறுதியளித்தார்
பின்னர் செய்தியாளர்களிடம் எம்.பி. மாணிக்கம் தாகூர் மேலும் கூறியதாவது:சிவகாசி மாநகராட்சிக்கு, ஒன்றிய அரசு வழங்க வேண்டிய 1000 கோடி ரூபாய் நிதியை வழங்காமல் இருப்பதால், எந்த வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்த முடியவில்லை. மேலும் சிவகாசியை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இணைத்து அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி ஒன்றிய அமைச்சகத்துக்கு கடிதம் எழுதப்படும். சிவகாசியின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கும், கேட்கப்படும் நிதிக்கும் ஒன்றிய அரசு இது வரை செவி சாய்க்கவில்லை. சிவகாசி நகரின் மீது பிரதமர் நரேந்திரமோடிக்கும், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கும் ஏன் இவ்வளவு கோபம் இருக்கிறது என்று தெரியவில்லை.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில், எடப்பாடி பழனிச்சாமியின் தோல்வி அவரது கண் முன்னே தெரிகிறது. அதனால் அவர் இப்போதே அழத் துவங்கிவிட்டார். அதிமுக கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்திக்க இருப்பதை எடப்பாடி பழனிச்சாமி தெரிந்து கொண்டார். ஈரோடு இடைத்தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசனின் ஆதரவை, மிக முக்கியமான ஆதரவாக காங்கிரஸ் கட்சி பார்க்கிறது. அதனால் காங்கிரஸ் கட்சி கமல்ஹாசனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. காலமும், அரசியலும் மாறிக்கொண்டே இருக்கும், இன்று ஆதரவு கொடுத்துள்ள கமலை வரவேற்கிறோம்.
ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் முடிவு எப்படி இருக்கிறது என்பதையறிந்து, அதன் பிரதிபலிப்பாக 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம் என்று மாணிக்கம் தாகூர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu