சிவகாசி அருகே சொத்து தகராறில் தம்பி படுகொலை: 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது

Tobacco In Tamil | Tobacco News
X

பைல் படம்.

சிவகாசி அருகே சொத்து தகராறில் தம்பி படுகொலை சம்பவம் தொடர்பாக 2 சிறுவர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஈஞ்சார் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (40). இவர் மனைவி இந்திராதேவி மற்றும் 3குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவருக்கும் இவரது சகோதரர்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்தது. இது குறித்து இரு தரப்பிலும் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சொத்து பிரச்சனை குறித்து பேசுவதற்காக முருகனின் வீட்டிற்கு அவரது சகோதரர்கள் முத்தீஸ்வரன், மணிகண்டன், விநாயகமூர்த்தி ஆகியோர் சென்றிருந்தனர். சொத்து பிரச்சினையில் கடும் வாக்குவாதம் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இதில் வாக்கு வாதம் முற்றிய நிலையில் முருகனை, அவரது மனைவியின் கண் முன்னால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த தகராறில் முருகனின் மனைவி இந்திராதேவி, மாமியார் பெரியதாய், மைத்துனர் உள்ளிட்டவர்களும் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்த முருகனின் சகோதரர் மணிகண்டன் உடல்நிலை மோசமாகவே, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து திருத்தங்கல் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த படுகொலை தொடர்பாக போலீசார் முத்தீஸ்வரன், விநாயகமூர்த்தி மற்றும் முருகனின் சகோதரி மகன்கள் 2 பேர் உட்பட 5 பேரை கைது செய்தனர். கொலை வழக்கில் சிக்கிய 2 சிறுவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!