காரியாபட்டி அருகே குண்டாற்றில் கட்டப்பட்ட தடுப்பணை: அமைச்சர் திறப்பு

காரியாபட்டி அருகே குண்டாற்றில் கட்டப்பட்ட  தடுப்பணை: அமைச்சர் திறப்பு
X

காரியாபட்டி அருகே 10.11 கோடி மதிப்பிலான புதிய தடுப்பணையை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்

காரியாபட்டி அருகே 10.11 கோடி மதிப்பிலான புதிய தடுப்பணையை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், கல்குறிச்சி கிராமத்தில் பொதுப்பணித்துறை / நீர்வள ஆதாரத்துறையின் மூலமாக குண்டாற்றில் குறுக்கே ரூ.10.11 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டது.

இந்தத் தடுப்பணையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார்,வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், வட்டாட்சியர் விஜயலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், ஒன்றியக்குழுத்தலைவர் முத்துமாரி, துணைத்தலைவர் ராஜேந்திரன். காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் செந்தில், ஒன்றியச் செயலாளர் கண்ணன், மாவட்டக் கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தோணுகால் பாலமுருகன், கல்குறிச்சி கணேசன், பந்தனேந்தல் சுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai powered agriculture