சிவகாசியில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
சிவகாசியில் நடைபெற்ற பக்ரீத் பண்டிகை தொழுகை
சிவகாசியில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்..
பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு பக்ரீத் பண்டிகை தொழுகை நிகழ்ச்சியில் பெண்கள், சிறுவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். பிற சமுதாய மக்களுக்கும் இஸ்லாமிய சகோதர்கள் பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை கூறி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்றாகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.
இஸ்லாமியர்களின் தூதுவராக நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹிம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்ததார். நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இறைவன் அருளால் இவரின் இரண்டாவது மனைவி ஆசரா மூலம் ஒரு ஆண் மகவு பிறந்தது. இஸ்மாயில் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள்.
இப்ராஹிமின் மகன் இஸ்மாயில் பால்ய பருவத்தை அடைந்தபொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள், இப்ராஹிம் அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டார். இதைப்பற்றி மகனிடம் கூறிய இப்ராஹிம், அவரின் அனுமதியோடு பலியிட துணிந்தபொழுது, சிப்ரயீல் என்னும் வானவரை அனுப்பி இறைவன் அதனை தடுத்து மேலும் ஒரு ஆட்டை இறக்கிவைத்தார். இஸ்மாயிலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இப்ராஹிமிற்கு கட்டளையிட்டார். மேற்கூரிய இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே பக்ரீத் ( தியாக திருநாள்) பண்டிகை இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu