பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்

சிவகாசியில், பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சுகாதாரத்துறை சார்பில், வளர் இளம் பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம், இந்து நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கலுசிவலிங்கம், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வைரக்குமார் வழிகாட்டுதல்படி, வளரிளம் பெண்கள் நலன் ஒருங்கிணைப்பாளர் உதயசங்கரி தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கில் உதயசங்கரி மாணவிகள் மத்தியில் பேசும்போது, ரத்தசோகை ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறைகளும், இளம் பெண்களுக்கு ஏற்ற உணவு வகைகள், உணவு உண்ணும் முறைகள் குறித்தும் விரிவாக பேசினார். ஆலோசகர் சங்கர் பேசுகையில், செல்போன்களை சரியான முறையில் கையாள வேண்டும், சமூக வலைதளங்களில் தேவையான விசயங்களை மட்டுமே தொடர வேண்டும். ஆபத்தான முறைகளில் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என்று குறிப்பிட்டார்.
சமூகநலத்துறை அதிகாரி ஜோஸ்பின் ராஜேஷ் பேசும்போது, பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லைகள் ஏற்பட்டாலோ, செல்போன்கள் மூலம் அத்துமீறல்கள் நடந்தாலோ உடனடியாக காவல்துறையில் புகார் தெரிவிக்க வேண்டும். எதற்காகவும் பயப்படக்கூடாது என்று குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயச்சந்திரன் மற்றும் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu