சிவகாசி பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்புத் துறை விழிப்புணர்வு முகாம்

சிவகாசி பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்புத் துறை  விழிப்புணர்வு முகாம்
X

தீயணைப்புத்துறையினர் மாணவர்களுக்கு செயல்முறை விளக்கங்களை செய்து காட்டினர்.

சிவகாசி அருகே பள்ளி மாணவர்களுக்கு, மழைக்கால பாதுகாப்பு மீட்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

சிவகாசி :

விருதுநகர் மாவட்டம், சிவகாசி தீயணைப்பு நிலையம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும்,முன்னெச்சரி்க்கை நடவடிக்கைகள் குறித்தும், செயல்முறை விளக்க விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

சிவகாசி அருகேயுள்ள சுப்பிரமணியபுரம், அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, சிவகாசி தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் மழைக்காலங்களில் ஆபத்துகளில் சிக்கியவர்களை எப்படி மீட்பது, தண்ணீரில் சிக்கியவர்களை மீட்டவுடன் செய்ய வேண்டிய முதலுதவிகள் குறித்தும் செயல்முறை விளக்கமளித்தனர். மேலும் மழை பெய்யும் போது சாலைகளில் சுற்றித் திரியக்கூடாது, மரங்களின் கீழ் நிற்கக்கூடாது, மின் சாதனங்களை கவனமாக கையாள வேண்டும் என்று மாணவர்களுக்கு, தீயணைப்பு வீரர்கள் அறிவுரை வழங்கினர். விழிப்புணர்வு முகாமில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.


தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆங்காங்கு பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் மழைக்காலங்களில் பின்பற்றவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், எச்சரிக்கையாக எப்படி இருப்பது, ஏரி, குளங்களில் குளிக்கும்போது பின்பற்றவேண்டிய பாதுகாப்பு முறைகள், விபத்துகளில் சிக்கிக் கொண்டவர்களை எப்படி பாதுகாப்பாக மீட்பது போன்ற அடிப்படை பாதுகாப்பு முறைகளை செயல்முறை விளக்கங்களுடன் தீயணைப்புத் துறையினர் விளக்கினர்.

இந்த பாதுகாப்பு நடவடிக்கை மாணவர்களுக்கு மட்டும் அல்ல. வேறு எவராவது ஆபத்தில் சிக்கிக்கொண்டால் அவர்களை பாதுகாப்புடன் மீட்பதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தும்.

Tags

Next Story