காரியாபட்டி வட்டாரத்தில் 5 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்ய ஏற்பாடு

காரியாபட்டி பகுதியில் பசுமை பாரதம் அறக்கட்டளை சார்பாக கிராமங்கள் தோறும் பனைவிதைகள் நடும் பணி துவங்கப்பட்டது.
Palm Tree Plant -பனை புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.
பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை. இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையாது. இதன் உச்சியில் கிட்டத்தட்ட 30 முதல் 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும். பனை தமிழ் நாட்டின் மாநில மரமாகும்.
இந்த நிலையில், காரியாபட்டி ஒன்றியத்தில், அனைத்து கிராமங்களிலும் 5 ஆயிரம் பனைமரங்கள் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதியில் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் மரக்கன்றுகள் நடும் பணிகளை செய்துவரும் பசுமை பாரதம் அறக்கட்டளை சார்பாக கிராமங்கள் தோறும் பனைவிதைகள் நடும் பணி துவங்கப்பட்டது. காரியாபட்டி கல்குறிச்சி குண்டாற்று தடுப்பணை பகுதியில் பனைவிதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றியக்குழு துணைத்
தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர்கள் கல்குறிச்சி கணேசன் , வக்கணாங்குண்டு தேவி லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், தடுப்பணை அமைந்துள்ள ஆற்றின் இரண்டு கரைப் பகுதிகளில் முதற்கட்டமாக 200 க்கு மேற்பட்ட பனைவிதைகள் நட்டுவைக்கப் பட்டது. ஒன்றிய துணைத் தலைவர் ராஜேந்திரன் பனைவிதை நடும்பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஜனசக்தி பவுண்டேசன் நிறுவனர் சிவக்குமார், கல்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர் மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பசுமை அறக்கட்டளை நிறுவனர் பொன்ராம் கூறுகையில், தமிழகத்தில் அடையாளமாக இருந்த பனைமரங்கள் இன்று காணாமல் போய்கொண்டிருக்கிறது. நிலத்தடி நீரை சேமித்து வறட்சியிலும் நன்றாக வளரும் பனைமரங்கள். மூலம் பல்வேறு பலன்கள் கிடைத்தது. மண் அரிப்பை ஏற்படாமல் கண்மாய் கரைகளை பாதுகாக்க கூடிய மரம் . நமக்கு பயன்தரும் பனைமரங்களை மீண்டும் பயிர்செய் வதற்காக அனைத்து கிராமங்களிலும் ஆற்றுகரைப் பகுதி, குளம், கண்மாய் கரை பகுதியில் பனை விதைகள் நடுவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம். தமிழக அரசின் ஊராட்சி , வேளாண்மை , தோட்டக்கலைத் துறை வனத்துறை மற்றும் வருவாய் துறையினரின் உறுதுணை யோடு பள்ளி கல்லூரி மாணவர்களின் ஒத்துழைப்போடு காரியாபட்டி ஒன்றியத்தில் 5 ஆயிரம் பனைவிதைகள் நடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu