மதுரை, சிவகாசி பகுதிகளில் அதிமுகவினர் சாலைமறியல்: முன்னாள் அமைச்சர் கைது
சிவகாசியில், மறியல் செய்த முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுகவினர் கைது:
சென்னையில் ஜனநாயக முறைப்படி போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ.க்களை கைது செய்ததை கண்டித்து, தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக மக்களின் அன்றாட நிகழ்வுகளில் ஏற்பட்டிருக்க கூடிய பின்னடைவுகள், அரசு, மக்களுக்கு கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சி என்ற முறையில் குரல் எழுப்ப இருக்கிறோம். எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி விவகாரத்தில், சபாநாயகரின் முடிவு தான் இறுதியானது. அதற்கு கட்டுப்படுவோம்.
தொண்டர்களின் அடிப்படை உரிமையை காக்கவே எம்.ஜி.ஆர். சட்ட விதிகளை உருவாக்கி அதை பாதுகாத்தார். ஆனால், இப்போது வருபவர்கள் தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கி சட்டவிதிகளை மாற்ற நினைக்கின்றனர். 1½ கோடி தொண்டர்கள் இந்த இயக்கத்தை தாங்கி பிடித்து 50 ஆண்டு காலம் மாபெரும் இயக்கமாக வைத்திருக்கிறோம். இந்த கட்சியில், சாதாரண தொண்டன் கூட கழகத்தின் பெரிய பதவிக்கு வரலாம் என் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்திருந்தார்.
இதனிடையே, சட்டப்பேரவை விதிகளின்படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட பதவியாகும் என்று சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார். எதிர்க்கட்சி துணைத்தலைவர் உள்ளிட்ட மற்ற பதவிகள் மற்ற நபர்களை திருப்திப்படுத்தவே கட்சிகளால் வழங்கப்படுகின்றன. பழனிசாமி, பன்னீர்செல்வம் அளித்த கோரிக்கைகள் எனது ஆய்வில் இருந்து வருகிறது என்றார். உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக அங்கீகரிக்க பழனிசாமி தரப்பு கோரும் நிலையில் சபாநாயகர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்துணைத்தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் எடுத்துள்ள நிலைப்பாடால் அதிருப்தியடைந்த அதிமுகவினர், சென்னையில் போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் இன்று கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து, தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக, மதுரை திருமங்கலம் தேவர் சிலை முன்பு ஆர்.பி.உதயகுமார் உத்தரவின் பேரில், அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி செல்லும் சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதைத்தொடர்ந்து அங்கு வந்த திருமங்கலம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கலந்து சென்றனர்.
சிவகாசியில்... சிவகாசி பேருந்து நிலையம் முன்பு, முன்னாள் அமைச்சர் தலைமையில் அதிமுக கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சிவகாசி பேருந்து நிலையம் முன்பாக, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில், அதிமுக கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் உட்பட அதிமுக கட்சியினரை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் கூறியது: திமுக அரசு ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்கட்சியை நசுக்கி விடலாம் என்று நினைப்பது ஒரு காலமும் நடக்காது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு அடுத்தபடியாக எடப்பாடியார் அதிமுக கட்சியின் 3வது அத்தியாயம். அதிமுகவினரை அச்சுறுத்தும் விதமாக திட்டமிட்டு, முன்னாள் முதல்வர் எடப்பாடியார் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளார். எடப்பாடியார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றார் அவர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu