சிவகாசியில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
சிவகாசியில் நடந்த அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசினார்.
ADMK Party -விருதுநகர் மாவட்டம் சிவகாசி, பாவாடி தோப்பு பகுதியில் மின் கட்டணம் மற்றும் சொத்து வரியை உயர்த்தியுள்ள தமிழக அரசை கண்டித்து, அ.தி.மு.க. வினர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷமிட்டனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் .ராஜேந்திரபாலாஜி பேசும்போது,
தி.மு.க. அரசு உயர்த்தியுள்ள பால் விலை, ஆவின் பொருட்கள் விலை உயர்வுகள் குறித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் கேட்க தயாராக இல்லை. இதனை எதிர்த்து கேட்கும் கட்சியாக அ.தி.மு.க. மட்டுமே உள்ளது . ஸ்டாலின் மக்களை பற்றி கவலைப்படுவதில்லை, அவர் தனது மக்களை மட்டுமே பார்த்து வருகிறார்.
விலைவாசி உயர்வை பற்றி கவலைப்படாத தி.மு.க. அரசு முதலில் சொத்து வரியை உயர்த்தியது, தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. விலைவாசி உயர்வைப்பற்றி தி.மு.க. அமைச்சர்கள் யாரும் கவலைப்படவில்லை. தி.மு.க. அமைச்சர்கள் கிடைப்பதை எல்லாம் சுருட்டிக்கொண்டு சென்று விடலாம் என்று எண்ணிக் கொண்டுள்ளனர். இந்த தி.மு.க. அரசு நின்றால் வரி, உட்கார்ந்தால் வரி என்று மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. இந்த நிலை மாறவேண்டும் என்றால் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜவர்மன், சந்திரபிரபா உட்பட விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu