சிவகாசியில் முன்னாள் அமைச்சர் சந்தித்து ஆறுதல் கூறிய அதிமுக எம்.பி
சிவகாசியில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தந்தையார் படத்துக்கு, சி.வி. சண்முகம் எம்.பி. மாலை அணிவித்தார்.
சிவகாசியில் முன்னாள் அமைச்சரை திடீரென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்த மாநிலங்களவை அதிமுக உறுப்பினர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியில் வசித்து வந்த, அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தந்தை தவசிலிங்கம், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானார்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். திருத்தங்கல்லில் இன்று நன்பகல், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் வீட்டிற்கு, முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் திடீரென்று வருகை தந்து, கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தந்தையின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினார். பின்னர் ராஜேந்திரபாலாஜியின் உறவினர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆறுதல் கூறினார். உடன் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu