Admk Booth Committee Meet அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்: முன்னாள் அமைச்சர் துவக்கம்
சிவகாசி அருகே ,அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
Admk Booth Committee Meet
சிவகாசி அருகே, விஸ்வநத்தம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமையில், பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் .ராஜேந்திரபாலாஜி பேசும்போது, விருதுநகர் மாவட்டம் எப்போதும் அதிமுக கோட்டை என்பதை வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் நிரூபிக்க வேண்டும். தமிழகம் முழுவதும், முன்னாள் முதல்வர் எடப்பாடியாருக்கு ஆதரவு அலை வீசுகிறது. தமிழக மக்கள் அதிமுக கட்சிக்கு வாக்களிப்பதற்காக காத்திருக்கின்றனர். அந்தளவிற்கு தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சி மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.
மக்களுக்கு நல்லது செய்வதற்கு அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது. மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், அதிமுக கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நிர்வாகியும், அவர்களது பகுதியில் உள்ள வாக்காளர்களைச் சந்திக்க வேண்டும். கட்சியில் உள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று பேசினார். ஆலோசனை கூட்டத்தில்,விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பலராம், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பிலிப்வாசு, சிவகாசி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜ், மேற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் மணிகண்டன், கலைப்பிரிவு செயலாளர் மாரிமுத்து உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu