சிவகாசி ஸ்ரீவிஸ்வநாத சுவாமி கோவிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றம்

சிவகாசி ஸ்ரீவிஸ்வநாத சுவாமி கோவிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றம்
X

சிவகாசியில் ஸ்ரீவிஸ்வநாத சுவாமி - ஸ்ரீவிசாலாட்சி அம்மன் கோவிலில், ஆடித்தபசு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

சிவகாசி ஸ்ரீவிஸ்வநாத சுவாமி கோவிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஸ்ரீவிஸ்வநாத சுவாமி - ஸ்ரீவிசாலாட்சி அம்மன் வீற்றிருக்கும் பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில், ஆடித்தபசு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று அதிகாலையில் ஸ்ரீவிஸ்வநாத சுவாமிக்கும் - ஸ்ரீவிசாலாட்சி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீவிசாலாட்சி அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. கொடிமரத்திற்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டு, சிவாச்சாரியர்கள் வேதமந்திரம் முழங்க ஆடித்தபசு திருவிழா கொடி ஏற்றப்பட்டது. கொடி மரத்திற்கு பூரண தீபாராதணை நடைபெற்றது.


பின்னர் அம்மன் சன்னதி முன்பு ஸ்ரீவிஸ்வநாத சுவாமி, ஸ்ரீவிசாலாட்சி, ஸ்ரீபிரியாவிடையுடன் சர்வ பூரண அலங்காரத்தில் எழுந்தருளினார். சுவாமிகளுக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றது. ஆடித்தபசு கொடியேற்றம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் நிகழ்ச்சி உபயதாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது