சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து
X

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து:

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ரெங்கப்பநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள, கணபதி பயர் ஒர்கஸ் என்ற பட்டாசு ஆலையில் இன்று காலை திடீர் வெடி விபத்து ஏற்பட்டது.

பட்டாசு ஆலையில் சரக்குகள் வைக்கப்பட்டிருந்த அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு, அந்த அறை முற்றிலும் இடிந்து விழுந்து சேதமானது. விபத்து குறித்து தகவலறிந்த, சிவகாசி தீயணைப்புப்படை வீரர்கள், நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.

காலை நேரத்தில் தொழிலாளர்கள் யாரும் வேலைக்கு வராததால், நல் வாய்ப்பாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்து நடந்த இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!