/* */

சிவகாசி அருகே பூட்டிக் கிடந்த பட்டாசு ஆலையில் இடி, மின்னல் தாக்கி தீ விபத்து

சிவகாசி அருகே பூட்டிக் கிடந்த பட்டாசு ஆலையில் இடி, மின்னல் தாக்கி தீ விபத்து ஏற்பட்டது.

HIGHLIGHTS

சிவகாசி அருகே பூட்டிக் கிடந்த பட்டாசு ஆலையில் இடி, மின்னல் தாக்கி தீ விபத்து
X

தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, பழனியாண்டவர்புரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரவி (50). இவருக்கு சொந்தமான, கம்பி மத்தாப்பூ தயாரிக்கும் ஜெய்மனோஜ் ஸ்பார்க்லர்ஸ் என்ற பெயரிலான பட்டாசு ஆலை, சிவகாசி - சாத்தூர் சாலையில் உள்ள அனுப்பங்குளம் பகுதியில் உள்ளது.

நிர்வாக காரணங்களால் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இந்த பட்டாசு ஆலை செயல்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்றிரவு அனுப்பங்குளம் பகுதியில் பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது பூட்டிக்கிடந்த பட்டாசு ஆலையில் பலத்த இடி, மின்னல் தாக்கியதில் அங்கிருந்த மத்தாப்பூக்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டது.

மேலும் ஆலை வளாகத்தில் போட்டு வைக்கப்பட்டிருந்த கழிவு அட்டை, பேப்பர்கள், கழிவு பெட்டிகளிலும் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 1 Jun 2023 7:18 AM GMT

Related News

Latest News

 1. உலகம்
  இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
 2. இந்தியா
  ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை
 3. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் அ.தி.மு.க.விற்கு தாவிய பா.ஜ.க., தி.மு.க....
 4. தமிழ்நாடு
  ஜூன் 20 ம்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை ரத்து என தகவல்
 5. லைஃப்ஸ்டைல்
  மனித அறிவாற்றல் அதிகரிக்க ஐந்து அடிப்படை வழிமுறைகள் பற்றி...
 6. லைஃப்ஸ்டைல்
  போலி சமையல் எண்ணெயை கண்டறிவது எப்படி?
 7. லைஃப்ஸ்டைல்
  அடேங்கப்பா...! ஊற வைத்த வேர்க்கடலையில் இத்தனை மகத்துவமான விஷயங்கள்...
 8. லைஃப்ஸ்டைல்
  பெயர் சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறச் செய்யும் பச்சை மாங்காய் - அதுல...
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே சீராத்தோப்பு முத்து நகர் பகுதியில் மரம் நடும் விழா
 10. குமாரபாளையம்
  பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மாத முதல் ஞாயிறு சிறப்பு வழிபாடு