சிவகாசி அருகே 2 வயது குழந்தை விளையாடும் போது தவறி விழுந்து உயிரிழப்பு

சிவகாசி அருகே 2 வயது குழந்தை விளையாடும் போது தவறி விழுந்து உயிரிழப்பு
X
சிவகாசி அருகே 2 வயது குழந்தை விளையாடும் போது தவறி விழுந்து உயிரிழந்தது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ஆனையூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (27). இவர் சிவகாசியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜனனி (2) என்ற பெண் குழந்தை இருந்தது. ஜனனிக்கு பிறந்தது முதல் உடல்நலக் குறைபாடு இருந்து வந்தது. அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஜனனி, தவறி கிழே விழுந்தாள். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவளை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சை பலனலிக்காமல் குழந்தை ஜனனி, பரிதாபமாக உயிரிழந்தாள். இந்த சம்பவம் குறித்து மாரனேரி காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது