பெண் கழுத்தை அறுத்து கொலை! சாத்தூர் அருகே விபரீதம்!

பெண் கழுத்தை அறுத்து கொலை! சாத்தூர் அருகே விபரீதம்!
X

சாத்தூர் அருகே கொலை 

சாத்தூரில் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

சாத்தூர் : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயு அமைந்துள்ளது ஊத்துப்பட்டி எனும் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (50). இவரது மனைவி ராஜேஸ்வரி (40). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். முத்துப்பாண்டி கட்டிட வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் ராஜேஸ்வரிக்கும், சங்கரநத்தம் பகுதியை சேர்ந்த பரமசிவம் (50) என்பவருக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருந்துள்ளது. பரமசிவம் கூலி வேலை பார்த்து வருகிறார். ராஜேஸ்வரி, பரமசிவம் இருவருக்கும் இடையில் திருமணம் தாண்டிய உறவு இருந்ததைக் குறித்து அறிந்த முத்துப்பாண்டி முதலில் கோபப்பட்டாலும், தனது மனைவியிடம் பொறுமையாக எடுத்துக் கூறி தன்மையாக கண்டித்துள்ளார். அதன்பிறகு பரமசிவத்துடன் பழகுவதை ராஜேஸ்வரி தவிர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துப்பாண்டி வேலை விசயமாக வெளியூருக்கு சென்றிருந்தார். இன்று காலை வீட்டுக்கு திரும்பி வந்த முத்துப்பாண்டி, தனது வீட்டில் மனைவி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் குறித்து தகவலறிந்த ஏழாயிரம்பண்ணை காவல்நிலைய காவலர்கள் விரைந்து சென்று, ராஜேஸ்வரியின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையினரில் முதற்கட்ட விசாரணையில் தன்னுடன் நன்றாக பழகிவந்த ராஜேஸ்வரி திடீரென்று தன்னிடம் பேசுவதை தவிர்த்த ஆத்திரத்தில், பரமசிவம் ராஜேஸ்வரியை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக தெரிய வந்தது. தலைமறைவாக இருக்கும் பரமசிவத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி