தனியார் நிறுவனத்தில் பணமோசடி புகாரில் தந்தை, மகன் கைது
தனியார் நிறுவனத்தில் பண மோசடியில் ஈடுபட்ட தந்தை, மகன் மீது வழக்கு
விருதுநகர் எல்.பி.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன் (55). இவர் பேராலி சாலையில் உள்ள தனியார் பாலிபேக் நிறுவனத்தின் மேலாளராக கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். ஞானசேகரன், பாலிபேக் நிறுவனத்திற்கு தேவையான மூலப் பொருட்களை தனது மகன் கவுதம் (25) நடத்தி வந்த நிறுவனத்தில் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளார். இதற்காக ஞானசேகரனும், கவுதமும் போலியான பில்களை தயார் செய்துள்ளனர். பாலிபேக் நிறுவனத்தின் கணக்கு தணிக்கையின் போது, ஞானசேகரன் போலி பில் மற்றும் ரசீதுகள் மூலம் 24 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து தனியார் நிறுவனத்தின் கணக்காளர் செல்வராஜன், விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் தனியார் பாலிபேக் நிறுவன மேலாளர் ஞானசேகரன், அவரது மகன் கவுதம் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே, மருத்துவர் வீட்டில் வைத்திருந்த 6 லட்சம் ரூபாய் பணம் திருட்டு
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சம்மந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (50). மருத்துவரான கனகராஜ், வீட்டின் கீழ்த்தளத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சீட்டுப்பணம் 6 லட்சம் ரூபாயை, மருத்துவமனையில் உள்ள அலமாரியில் வைத்துள்ளார். நேற்று கனகராஜ் அலமாரியில் வைத்திருந்த பணத்தை எடுக்கச் சென்ற போது, அங்கு வைக்கப்பட்டிருந்த பணம் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தனது வீட்டில் உள்ளவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடம் கனகராஜ் பணம் மாயமானது குறித்து விசாரித்துள்ளார். ஆனால் பணம் மாயமானது குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இது குறித்து மருத்துவர் கனகராஜ், ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu