விருதுநகர் மாவட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள்! தயாரிப்பு பணி மும்முரம்!

விருதுநகர் மாவட்டத்தில், 29 கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த நெசவாளர்களுக்கு, அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சீருடைகள் தயாரிக்கும் ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பு.....

விருதுநகர் மாவட்டத்தில், பதிவு செய்யப்பட்ட 29 கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த நெசவாளர்களுக்கு, அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சீருடைகள் தயாரிக்கும் ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், சேத்தூர், சுந்தரபாண்டியம், திருவில்லிபுத்தூர், புனல்வேலி பகுதிகளில் உள்ள கைத்தறி, துணிநூல்துறை கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்துள்ள சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள், ஆண்டு தோறும் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகள் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து கைத்தறி, துணிநூல்துறை உதவி இயக்குனர் வெங்கடேஷ் கூறும்போது, கைத்தறி தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில், அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடை தயாரிக்கும் பணிகள் ஆண்டு தோறும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 4 ஆயிரத்து 253 பெடல் தறிகளுக்கு, இந்த கல்வியாண்டிற்கான சீருடைகள் நெய்யும் பணிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் முதல், வரும் செப்டம்பர் மாதம் வரையில் பள்ளி சீருடைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெறுவது வழக்கம். தற்போது வரை தயாரான 25 லட்சத்து, 5 ஆயிரம் மீட்டர் சீருடை துணிகள் நெசவாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது, இது உற்பத்தி சதவிகிதத்தில் 39 சதவிகிதமாகும். தொடர்ந்து வரும் மாதங்களில் மீதம் உள்ள சீருடைகளும் நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் என்று கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!