கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற இரு பெண் பக்தர்கள் விபத்தில் உயிரிழப்பு

கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற இரு பெண் பக்தர்கள் விபத்தில் உயிரிழப்பு
X

பைல் படம்

பாதயாத்திரை சென்ற 2 பெண் பக்தர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற 2 பெண் பக்தர்கள், விபத்தில் சிக்கி உயிரிழப்பு.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பழனியம்மாள் (35), சண்முகப்பிரியா (19), முத்துலட்சுமி (38). இவர்கள் மூன்று பேரும் மற்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலரும் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றார்கள்.

இன்று அதிகாலை தாயில்பட்டி அருகே இவர்கள் நடந்து சென்ற போது, எதிரே வந்த வேன் ஒன்று இவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் சிக்கிய பழனியம்மாள், சண்முகப்பிரியா இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். முத்துலட்சுமி படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.

விபத்து தகவலறிந்த வெம்பக்கோட்டை காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று, விபத்தில் சிக்கி உயிரிழந்த 2 பெண்களின் உடல்களை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற 2 பெண் பக்தர்கள், விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
மாணவிக்கு பாலியல் தொல்லை: கைதான அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்