சிதம்பரவேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம்

சிதம்பரவேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம்
X

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்காநல்லூர் கிராமத்திலுள்ள கோயிலில் சிதம்பரஸ்வரருக்கும் சிவகாமி அம்மாலுக்கும் திருக்கல்யாணம்  நடைபெற்றது.

தெற்கு வெங்காநல்லூர் கிராமத்தில் 300 ஆண்டுகள்பழமை வாய்ந்த சிதம்பரேஸ்வரர் கோவிலில் 6 ஆண்டுகளுக்கு முன்குடமுழுக்கு நடந்தது

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்காநல்லூர் கிராமத்தில் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சிதம்பரேஸ்வரர் கோவில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷே நடைபெற்றது.

இந்த திருக்கோவில், இராஜபாளையம் மாயூர்நாத சாமி கோவில் (இந்து அறநிலையத்துறை,) கண்காணிப்பில் உள்ளது. திருக்கோவிலில் ஆவணி மாத திருக்கல்யாண திருவிழா கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது.மூன்றாம் நாளான இன்று சிதம்பரேஸ்வரருக்கும் சிவகாமி அம்மாலுக்கும் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த திருக்கல்யாணத்தில், சுற்று வட்டார பகுதியை சேரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கல்யாணத்தில், கலந்து கொண்ட பக்தர்கள் சிதம்பரேஸ்வரர் சிவகாமி அம்பாளை கண்டு தரிசனம் செய்தனர்.பின்பு, பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது. குறிப்பாக, திருமண விழாவில் கலந்து கொண்டவர்கள் தங்களால் மொய் எழுதுவது போல் திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் மொய்யெழுதிச் சென்றனர்..

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!