சிவகாசி கோயில்களில் மார்கழி மாத கடைசி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை

சிவகாசி கோயில்களில்   மார்கழி மாத கடைசி  வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை
X

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீபத்திரகாளியம்மன், ஸ்ரீமாரியம்மன்

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீபத்திரகாளியம்மன், ஸ்ரீமாரியம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

சிவகாசியில் உள்ள கோயில்களில் மார்கழி மாத கடைசி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இன்று மார்கழி மாத கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன், ஸ்ரீமாரியம்மன் கோவில்களில், இன்று காலையில் சுவாமிகளுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீபத்திரகாளியம்மன், ஸ்ரீமாரியம்மன் சுவாமிகளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் கடைக்கோவிலில் எழுந்தருளிய சுவாமிகளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Tags

Next Story