சாத்தூர் அருகே இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணி: ஆட்சியர் தொடக்கம்

சாத்தூர் அருகே இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணி: ஆட்சியர் தொடக்கம்
X

சாத்தூர் அருகே இரண்டாம்  கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை ஆட்சியர்  ஜெயசீலன் துவக்கி வைத்தார்

2 ஆம் கட்ட அகழாய்வில் மேலும் பல பழமையான பொருட்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டை – விஜயகரிசல்குளம் பகுதியில்வெம்பக்கோட்டை அருகே வைப்பாறு வடகரையில் விஜயகரிசல்குளம் பகுதியில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் அகழாய்வு கடந்த ஆண்டு மார்ச் 16-ந் தேதி முதல் செப்டம்பர் இறுதி வரை நடைபெற்றது.

வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் முன்னதாக கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பிருந்து மேற்கொள்ளப்பட்ட மேற்பரப்பு அகழாய்வின் மூலம் இந்த தொல்லியல் மேட்டில் நுண்கற்காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்களை வெளிப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இங்கு அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து தமிழக அரசு இங்கு அகழாய்வு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு முதலாம் கட்ட அகழாய்வு நடத்தது. இதில் 3,254 பழங்கால பொருட்கள் கிடைத்தன. இங்குள்ள மக்கள் வெளி நாடுகளில் கடல்வழி வாணிபம் செய்ததற்காண சான்றாக பல்வேறு பழமையான பொருட்கள் கண்டறியப்பட்ட நிலையில் அதன் தொடர்ச்சியை 2-ம் கட்ட அகழாய்வில் அறிய முடியும் என்பதால் 2ம் கட்ட அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்வதற்காக மேலும் 3 ஏக்கர் நிலம் தயார் செய்யப்பட்டு, 18 அகழாய்வு குழிகள் அளவீடு செய்யப்பட்டது. 2ம் கட்ட அகழாய்வுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.

இந்தப் பகுதியில் சங்கினால் செய்யப்பட்ட அணிகலன்கள், கண்ணாடி பொருட்கள் அதிகளவில் கிடைத்துள்ளதால், 2ம் கட்ட அகழாய்வில் மேலும் பல பழமையான பொருட்கள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறினர். வெம்பக்கோட்டை பகுதியில் கிடைக்க இருக்கும் பழமையான பொருட்களை கொண்டு, தமிழ்நாட்டின் தொன்மையை மேலும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags

Next Story