‘தினம் ரூ.100 கொள்ளை’- மோடி அரசு மீது தி.மு.க. எம்.பி. குற்றச்சாட்டு

‘தினம் ரூ.100 கொள்ளை’- மோடி அரசு மீது தி.மு.க. எம்.பி. குற்றச்சாட்டு
X

ராஜபாளையம் அருகே நடைபெற்ற திமுக கூட்டத்தில் தனுஷ் எம்.குமார் பேசினார்.

தினம் ரூ.100 கொள்ளை நடக்கிறது என மோடி அரசு மீது தி/மு/க/ எம்.பி. தனுஷ் எம் குமார் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார்.

ஒன்றிய மோடி அரசு விஞ்ஞான முறையில் ஒவ்வொரு குடும்பத்திலும் தினந்தோறும் 100 ரூபாய் கொள்ளை அடிக்கிறது என, தென்காசி மக்களவை உறுப்பினர் தனுஷ் குமார் குற்றம் சாட்டி உள்ளார்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் நாயகனின் பிறந்தநாள் விழா என்ற தலைப்பில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது .

இந்த பிறந்தநாள் பொதுக் கூட்டத்திற்கு , இராஜபாளையம் நகரச் செயலாளர் பேங்க் ராமமூர்த்தி தலைமை தாங்கினார் . இந்த கூட்டத்தில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுது, ஒன்றிய மோடி அரசு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குடும்பத்தினரிடமிருந்து, விஞ்ஞான முறையில் 100 ரூபாய் கொள்ளை யடிக்கிறது.

பெட்ரோல் விலை, சிலிண்டர் விலை என, உயர்த்தி விஞ்ஞான முறையில் கொள்ளையடிக்கிறது என, குற்றச்சாட்டை முன் வைத்தார். அதேபோல், ஒவ்வொரு தனி நபர் வங்கியில் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவதாக கூறினார். செலுத்தவில்லை. தமிழக முதல்வர் ஒவ்வொரு நபருக்கும் ரூ. 25 லட்சம் பயன்பெறும் வகையில் முதல்வர் காப்பீடு திட்டத்தை கொண்டு வந்து மக்கள் பயடைய செய்துள்ளார். இதை மனதில் வைத்து, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், தென்காசி தொகுதியில் யார் நின்றாலும் அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டுமென என பேசினார்.

இதைத் தொடர்ந்து, பேசிய இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் , மோடி அரசு தமிழகத்திற்கு எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை. இராஜபாளையம் வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, குரங்கு போல் தாவிக்கொண்டு பேசுகிறார். இராஜபாளையம் சாலைகள் சரியில்லை எனக்கூறி இந்த சாலை ஒன்றும் நகராட்சி சாலைகள் அல்ல. அதேபோல், மாநில அரசு சாலையும் அல்ல இது மத்திய அரசின் நகாய் திட்டத்தின் கீழ் உள்ளது. மத்திய அரசு தான், இந்த சாலையை போட வேண்டும். நாங்கள் சாலை அமைக்க பலமுறை வலியுறுத்தி வருகிறோம். ஆனால், சாலை போடவில்லை. அண்ணாமலை இது தெரியாமல் , எம்.எல்.ஏ .சாலை போடவில்லை என, பேசுகிறார். அண்ணாமலை புரிந்து கொண்டு பேச வேண்டும். பாரதிய ஜனதா கட்சியினர் புரியாமல் தான் எப்பொழுதும் பேசுவார்கள் என, குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த சாலை நகாய் திட்டத்தின் கீழ் வருவதால் ஒன்றிய அரசு தான் சாலையை சரி செய்ய வேண்டுமென குற்றச்சாட்டை முன்வைத்து பேசினார்.

இந்த கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய ராஜீவ் காந்தி பேசும் பொழுது, விரும்பிய கடவுளை கொண்டாடுவது விரும்பிய மொழியை பேசுவது எல்லோருக்கும் உரிமை உண்டு என உரக்கச் சொன்னது திராவிட மாடல் அரசு. நடக்க இருக்கிற தேர்தல் இந்தியா என்கிற பல்வேறு மொழி பேசுகின்ற மாநிலங்களை கொண்ட இந்தியாவின் தேர்தல் இந்தத் தேர்தலில் மோடியை வீழ்த்த வேண்டும்.

மோடி ஒன்றும் பெரிய வீரன் என்று நாம் அஞ்ச வேண்டாம் மோடி என்கின்ற பலூனை கருப்பு ஊசி கொண்ட திராவிடம் வீழ்த்தும் .

நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்குள்ள பாரதிய ஜனதா கட்சி மூலம் வர நினைக்கிறார் இது பெரியார் மண் இங்கு அவர் வெல்ல முடியாது அன்று ஹிட்லரை வீழ்த்துவதற்கு ஜோசப் ஸ்டாலின் இருந்தார் .

இன்று, நரேந்திர மோடியை வீழ்த்துவதற்கு முத்துவேல் கருணாநிதி மகன் ஸ்டாலின் இருக்கிறார் . வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், 39 தொகுதியிலும் வெற்றி பெற செய்து தமிழக முதல்வர் யாரை கை காட்டுகிறாரோ அவர்கள் தான் பிரதமராக வேண்டும். அதற்கு நாம் அனைவரும் உழைக்க வேண்டுமென சிறப்புரையாற்றினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!