இராஜபாளையம் அருகே விசைத்தறி தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி திறப்பு போராட்டம்

இராஜபாளையம் அருகே விசைத்தறி தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி திறப்பு போராட்டம்
X
இராஜபாளையம் அருகே விசைத்தறி தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் நடத்தினார்கள்.
இராஜபாளையம் அருகே விசைத்தறி தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டம் நடத்தினார்கள்.

இராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஒன்பதாவது நாளான இன்று கிராம நிர்வாக அலுவலகம் முன்பு கஞ்சித்தொட்டி திறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியில், விசைத்தறியில் சேலை உற்பத்தி செய்யும் தொழிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 400க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல் பட்டு வருகிறது.

இவர்களுக்கு கடந்த 2018 முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஒப்பந்தம் போடப்பட்டு அதன் அடிப்படையில் கூலி (சம்பளம்) வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 2021- 2023 ஆண்டுக்கு கூலி ஒப்பந்தம் செய்வதற்கு முதலாளிகள் முன்வராத காரணத்தினாலும் தங்களுக்கு சம்பளத்தில் 75% உயர்த்தி தர வேண்டும் போனஸ் 20% சதவீதம் உயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9 நாட்களாக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் பல்வேறு கட்டங்களில் பேச்சுவார்த்தை நடந்தும் பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில், போராட்டம் உச்சக் கட்டத்தைஅடைந்தது.

ஏ.ஐ.டி யு.சி. வட்டார தலைவர் அய்யனார், சி.ஐ.டி.யு. வட்டாரத் தலைவர் ராசு தலைமையில் செட்டியார்பட்டி கிராமநிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு இன்று கஞ்சி திட்டி திறந்து போராட்டம் நடத்தினார்கள்.

ஈரோடு இடைத் தேர்தலில் கவனம் செலுத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரோடு பட்டினியால் வாடிவதங்கி கொண்டிருக்கும் தளவாய்புரம் விசைத்தறி தொழிலாளர்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தி முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என, விசைத்தறி தொழிலாளர்கள் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்