ரயிலில் கடத்தப்பட்ட 15 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய போலீஸார்
விருதுநகருக்கு வந்த விரைவு ரயிலில், 15 கிலோ கஞ்சா மீட்பு::மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில் நேற்று மாலை விருதுநகர் ரயில் நிலையத்திற்கு வந்தது.அப்போது அங்கிருந்த ரயில்வே போலீசார், எஸ்1 பெட்டியில் சோதனை செய்தனர். அங்கு கேட்பார் இல்லாமல் இருந்த ஒரு பையை போலீசார் சோதனை செய்தனர். அந்தப் பையில் சிறிய அளவிலான பொட்டலங்களில் சுமார் 15 கிலோ கஞ்சா இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
ரயில் பயணம் செய்த பயணிகளிடம் போலீசார் விசாரித்த போது, அந்தப் பையை யார் கொண்டு வைத்தது என்று தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம், ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். விரைவு ரயிலில் கஞ்சாவை கடத்திச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் விருதுநகர் ரயில் நிலையத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் கஞ்சா, குட்கா, தடை செய்யப்பட்ட போதைப் பொருள் நடமாட்டத்தை ஒழிக்க தமிழ்நாடு காவல்துறை நடத்திய ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0 நடவடிக்கையில், 13,320 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 25,295 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0 தொடர்பாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் கஞ்சா, குட்கா, மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் சென்ற ஆண்டு 06.12.20221 முதல் ஆபரேஷன் க்ஞ்சா வேட்டை 1.0 மற்றும் 2.0 என்ற காவல்துறையின் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த அதிரடி நடவடிக்கைகளின்போது, 13,320 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 25,295 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு, அவர்கள் பயன்படுத்திய 1,743 இரு சக்கர வாகனங்களும் 145 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அதே போல், 36,875 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டதோடு, 521 டன் குட்கா மற்றும் அவர்கள் பயன்படுத்திய 618 இரு சக்கர வாகனங்களும் 487 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.கஞ்சா மற்றும் குட்கா வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் 4,023 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும், கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபட்ட 616 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu