விருதுநகர் மாவட்ட அரிசி ஆலைகளில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் சோதனை

விருதுநகர் மாவட்ட அரிசி ஆலைகளில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் சோதனை
X

அரிசி ஆலைகளில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்ட அரிசி ஆலைகளில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

ரேசன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி மூடைகள் கடுத்தப்படுவதை தடுக்க, திடீர் சோதனைகள் செய்து நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஆபாஷனகுமார் உத்தரவிட்டிருந்தார்.

அவரது உத்தரவின் பேரில், விருதுநகர் மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் அரிசி அரவை ஆலைகளில், விருதுநகர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், ஆய்வாளர் ஆல்பின் பிரிஜிட்மேரி தலைமையில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டையில் உள்ள 4 அரிசி அரவை ஆலைகளில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் உள்ள அரிசி அரவை ஆலைகளிலும் சோதனை தொடர்ந்து நடைபெறும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!