/* */

விருதுநகரில் விஷம் குடித்து போலீஸ் தலைமைக் காவலர் தற்கொலை

விருதுநகரில் குடும்பத்தகராறு காரணமாக தலைமைக்காவலர் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார்

HIGHLIGHTS

விருதுநகரில் விஷம் குடித்து போலீஸ் தலைமைக் காவலர் தற்கொலை
X

விருதுநகரில் குடும்பத்தகராறு காரணமாக விஷம் குடித்து தலைமை காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

விருதுநகர் ஆயுதப்படை பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் ராஜீவ்பாண்டி (38). இவர் தனது மனைவி நிர்மலாதேவி மற்றும் 2 குழந்தைகளுடன், ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இவருக்கும், இவரது மனைவிக்கும் நீண்ட நாட்களாக குடும்பத் தகராறு இருந்து வந்தது. இது குறித்து நிர்மலாதேவி பரமக்குடியில் வசித்து வரும் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். நேற்று நிர்மலாதேவியின் பெற்றோர் விருதுநகருக்கு வந்து ராஜீவ்பாண்டி மீது, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுக்க சென்றனர். அப்போது அவர்களை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட ராஜீவ்பாண்டி மீது, சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், ராஜீவ்பாண்டியை கைது செய்து சொந்த ஜாமீனில் விடுவித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த தலைமை காவலர் ராஜீவ்பாண்டி, வீட்டிலிருந்த விஷத்தை குடித்துவிட்டு ஆயுதப்படை மைதானத்திற்கு வந்து மயங்கி விழுந்தார். அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில், ராஜீவ்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சூலக்கரை காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 29 March 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு