பணி நிரந்தரம்: கோயில்களில் பணியாற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கோரிக்கை

பணி நிரந்தரம்: கோயில்களில் பணியாற்றும்  முடிதிருத்தும் தொழிலாளர்கள்  கோரிக்கை
X

பைல் படம்

கோவில்களில் பணிபுரியும் முடிதிருத்தும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

கோவில்களில் பணிபுரியும் முடிதிருத்தம் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்று மருத்துவ சங்கம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு மருத்துவ சமூக நல சங்கம் முடிதிருத்தும் தொழிலார் நல சங்கம் மற்றும் விருதுநகர் மருத்துவ சமூக நல சங்கம் சார்பாக இன்று அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம், மாவட்ட நிர்வாகிகளும் கிளை நிர்வாகிகளும் சார்பாக மனு அளிக்கப்பட்டது.

அதில் கூறியிருப்பதாவது.மருத்துவ சமூக மக்களை பிற்பட்டோர் பட்டியலிருந்து தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினர் பட்டியயில் சேர்க்க வேண்டும், சமூக மக்களுக்கு சட்டப் பாதுகாப்பான முறை கோவில்களில் பணிபுரியும், முடிதிருத்துவோர், மற்றும் நாதஸ்வர கலைஞர்களை பணி நிரந்தரம் செய்து அரசு ஊழியராக வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியறுத்தப்பட்டிருந்தன.இதை பெற்றுக் கொண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் பேசுவதாக தெரிவித்தார்.

தமிழ்நாட்டிலுள்ள அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982ம் ஆண்டில் தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர்கள் (வேலை வாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம்.தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியம், தமிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு முடித்திருத்துவோர் நல வாரியம்.தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு கைவினைத் தொழிலாளர்கள் நல வாரியம்,தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம்.தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறிப்பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியம்.தமிழ்நாடு ஓவியர் நல வாரியம், தமிழ்நாடு பொற்கொல்லர் நல வாரியம்.

தமிழ்நாடு பொற்கொல்லர் நல வாரியம், தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் நல வாரியம். தமிழ்நாடு வீட்டுப் பணியாளர்கள் நல வாரியம். தமிழ்நாடு விசைத்தறி நெசவாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு பாதையோர வணிகர்கள் மற்றும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு சமையல் தொழிலாளர்கள் நல வாரியம் என ௧௭ நல வாரியங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் 30.11.1994 அன்று ஏற்படுத்தப்பட்டது. இவ்வாரிய நலத்திட்டத்தின் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள தொழில் இனங்கள் ஆகிய 53 வகையான தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Tags

Next Story