/* */

சிவகாசி மண்டல அலுவலகத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் மக்கள் அவதி

சிவகாசி மண்டல அலுவலகத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

HIGHLIGHTS

சிவகாசி மண்டல அலுவலகத்தில் தேங்கி நிற்கும்  கழிவு நீரால் மக்கள் அவதி
X

சிவகாசி மண்டல அலுவலகத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியின் 2-ம் மண்டல அலுவலகம் திருத்தங்கல்லில் செயல்பட்டு வருகிறது. இந்த மண்டல அலுவலகத்தில், மாநகராட்சியின் அலுவல் பணிகள் நடைபெற்று வருகிறது. மண்டல அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த சேவை மையம் அமைந்துள்ள பகுதியில், சிறிய அளவில் மழை பெய்தாலும் மழைநீர், குளம் போல் தேங்கி நிற்கிறது.

இதனால், இ-சேவை மையங்களுக்கு ஆதார் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் பதிவு செய்வதற்காக குழந்தைகளை அழைத்து வரும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

மழைநீர் வழியாமல் தேங்கி நிற்பதால், அங்கு செல்லும் முதியவர்களும் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

எனவே ,மண்டல அலுவலக வளாகப் பகுதியில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 29 July 2022 12:21 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  3. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  6. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  7. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  8. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  9. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  10. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...