சாத்தூர் அருகே சட்ட விரோத சரவெடி தயாரிப்பு : சூரார்பட்டியில் ஒருவர் கைது

virudhunagar news
X
விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை அருகேயுள்ள சூரார்பட்டி பகுதியில், வீடுகளில் சட்ட விரோதமாக சரவெடி தயாரித்தவர் கைது

சாத்தூர் அருகே சட்ட விரோதமாக சரவெடி தயாரித்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் - ஏழாயிரம்பண்ணை அருகேயுள்ள சூரார்பட்டி பகுதியில், வீடுகளில் சட்ட விரோதமாக சரவெடி தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஏழாயிரம்பண்ணை காவல்நிலைய சார்பு ஆய்வாளர் சையதுஇப்ராகிம் தலைமையில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சூரார்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் (35) என்பவர் வீட்டில் வைத்து சட்ட விரோதமாக சரவெடி தயாரித்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், சட்ட விரோதமாக சரவெடி தயாரித்த ஜெயராமனை கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்து 12 பெட்டி சரவெடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story