சிவகாசி அருகே கண்மாய் ஆக்கிரமிப்பு; கிராம மக்கள் எதிர்ப்பு
கண்மாய் ஆக்கிரமிப்புக்கு, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்லில் இருந்து விருதுநகர் செல்லும் சாலையில் உறிஞ்சிக்குளம் கண்மாய் உள்ளது. சுமார் 41 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த உறிஞ்சிக்குளம் கண்மாய், இதனை சுற்றியுள்ள 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நிலத்தடி நீர் ஆதராமாக உள்ளது.
இந்த நிலையில், சிவகாசி பகுதியைச் சேர்ந்த பசுமை இயக்கம் என்ற தனியார் அமைப்பு ஒன்று, கண்மாய் கரைகளில் மரக்கன்று நடுவதாக கூறி, கண்மாயின் கரைகளில் சுமார் 15 அடி அகலத்திற்கு மணல் பரப்பும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். கண்மாய் பகுதியில் மரக்கன்று நடுவதற்காக வருவாய்த்துறை உள்ளிட்ட எந்த அரசு நிர்வாகத்திடமும் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையறிந்த அந்தப் பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து, கண்மாய்க்குள் வேலை செய்து கொண்டிருந்தவர்களுடன் வாக்குவாதம் செய்து, பணிகளை உடனடியாக நிறுத்துமாறு கூறினர். இது குறித்து ,தகவலறிந்த திருத்தங்கல் காவல்நிலைய போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்து, கண்மாய்க்குள் வேலை செய்து கொண்டிருந்த பணியாட்கள் மற்றும் மண் அள்ளும் எந்திரங்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றினர்.
இதனால் ,அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu