காரியாபட்டி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி: சீறிப்பாய்ந்த காளைகள்

காரியாபட்டி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி: சீறிப்பாய்ந்த காளைகள்
X

சீறிப் பாய்ந்த காளைகளை வீரத்துடன் அடக்கிய மாடுபிடி வீரர்கள்.

நரிக்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் சீறிபாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கினர்.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம் செம்பொன் நெருஞ்சி அரியநாச்சி , அய்யனார், கருப்பசாமி கோவில் பொங்கல் விழாவினை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெற்றது.

காலை 8-10 மணிக்கு ஜல்லிக்கட்டு துவங்கியது. காளைகளை கால்நடைத்துறை மருத்துவர்கள் பரிசோதனை செய்த பிறகு, போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் வீரத்துடன் அடக்கினர்.

மாடுபிடி வீரர்களுக்கு குத்து விளக்கு, மிக்ஸி குக்கர், பீரோ போன்ற பரிசுகள் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை, அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ கல்யாணகுமார், டி.எஸ்பிக்கள், சகாயஜோஸ, மதியழகன், வட்டாட்சியர் சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா