இருக்கன்குடி மாரியம்மன் ஆலய உண்டியல் திறப்பு

இருக்கன்குடி மாரியம்மன் ஆலய உண்டியல் திறப்பு
X

உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள். 

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 10 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ளது பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தும் பணம் மற்றும் நகைகளை கணக்கிடும் பணிகள் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 10 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டன. உண்டியலின் மூலம் காணிக்கையாக 42 லட்சத்து, 16 ஆயிரத்து, 716 ரூபாய் பணமும், 119 கிராம் தங்கமும், 627 கிராம் வெள்ளிப் பொருட்களும் காணிக்கையாக கிடைத்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உண்டியல் காணிக்கையை எண்ணும் பணிகள் இந்து அறநிலையத்துறை விருதுநகர் மாவட்ட உதவி ஆணையாளர் வளர்மதி, இருக்கன்குடி கோவில் உதவி ஆணையாளர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் தலைவர் ராமமூர்த்தி மேற்பார்வையில், ஓம்சக்தி பக்தர்கள் குழு, அய்யப்பா சேவா சங்கம், மாரியம்மன் பக்தர்கள் குழு உறுப்பினர்கள் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணிகளில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
ai future project