ஐஜேகே பெண் வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

ஐஜேகே பெண் வேட்பாளர் தீவிர பிரச்சாரம்
X

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மையம் கூட்டணி கட்சி சார்பில் ஐஜேகே பெண் வேட்பாளர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார் .

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மையம் கட்சியின் கூட்டணி கட்சியான இந்திய ஜனநாயக கட்சியில் வேட்பாளராக பாரதி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தனக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். சாத்தூர் நகரப்பகுதிகளில் உள்ள முருகன் கோவில் தெரு ,மாரியம்மன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, சிவன் கோவில் தெரு என பிரதான பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.வெற்றி பெற்ற 2 ஆண்டுகளில் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக பத்திரத்தில் கையொப்பமிட்டு போட்டியிடுகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!