சாத்தூரில் பலத்த மழை: சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் மக்கள் அவதி

சாத்தூரில் பலத்த மழை: சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் மக்கள் அவதி
X

பலத்தமழையால் சாத்தூர் சாலையில் தேங்கியுள்ள நீர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

சாத்தூரில், மழை காரணமாக சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் சிரமப்படும் நிலை நீடிக்கிறது

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சாத்தூர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருவதால் நகரின் பல இடங்கள் குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. இதனால் மழை பெய்யும்போது, குண்டு குழிகளில் நீர் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் விபத்துகளில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.

மேலும் வெம்பக்கோட்டை சாலை, சாத்தூர் புறவழிச்சாலை, நான்கு வழிச்சாலை பகுதியில் மழைநீர் வழிந்தோடுவதற்கு வசதி இல்லாததால், மழைநீர் சாலைகளில் தேங்கி நிற்கின்றது. இதனால் சாலையை கடக்கும் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பாதாள சாக்கடை பணிகள் முடிந்த இடங்களில் உடனடியாக சாலைகளை சீரமைக்க வேண்டும், புறவழிச்சாலை மற்றும் நான்கு வழிச்சாலையில் மழைநீர் தேங்கி நிற்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி