விருதுநகர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

விருதுநகர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
X

விருதுநகர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் தாெடர் காேடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.

கடந்த 5 நாட்களாக, மேலடுக்கு சுழற்சி காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் வழக்கமான கோடை வெயில் கடுமையாக இருந்துவந்த நிலையில் மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசத் துவங்கியது. சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல்மழை பெய்தது.

திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம், தளவாய்புரம், சேத்தூர், மல்லி, கிருஷ்ணன்கோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்தது. தொடர் மழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் வெப்பம் ஓரளவு தணிந்துள்ளது. குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளதால் கோடை கால புழுக்கம், இறுக்கம் இல்லாமல் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் தற்போது பெய்துவரும் மழை, கோடைகால விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!