சிவகாசி வட்டாரத்தில் சாரல் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

சிவகாசி வட்டாரத்தில் சாரல் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
X

சாரல் மழை பெய்த காட்சி 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இன்று திடீர் சாரல்மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வருகிறது. வழக்கமான கோடைக் காலங்களை விட இந்தாண்டு வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிக உக்கிரமாக இருப்பதால், மதிய நேர வேளைகளில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்தது.

இந்நிலையில் இன்று காலையும் வழக்கம் போல வெயில் மிக கடுமையாக இருந்தது. பிற்பகலில் திடீரென்று மேகங்கள் திரண்டு வந்து குளிர்ந்த காற்று வீசியது. சற்று நேரத்தில் பரவலாக சாரல்மழை பெய்யத் துவங்கியது. சுமார் ஒரு மணி நேரம் சாரல் மழையும், அவ்வப்போது சற்று பரவலாக பலத்த மழையும் பெய்தது. திடீரென்று பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. வெய்யிலின் தாக்கத்தை மழை குறையச் செய்ததால், மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!