விநாயகர் சதுர்த்தி: ராஜபாளையத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்தி:  ராஜபாளையத்தில்  பிரதிஷ்டை  செய்யப்பட்ட விநாயகர் சிலைகள்
X

இராஜபாளையம் வடக்கு காவல் நிலையம் அருகே தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் கோவில் பகுதியில் பிரதிஷ்டை செய்ய கொண்டு செல்லப்பட்ட விநாயகர்  சிலைகள்

இராஜபாளையம் வடக்கு காவல் நிலையம் அருகே தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் கோவில் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தயார் செய்யப்பட்ட பிரமாண்டமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய எடுத்துவரப்பட்டது

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் கடந்த 30 ஆண்டு காலமாக விநாயகர் சதுர்த்தி திருவிழாவிற்காக பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் செய்து ஊர்வலமாக எடுத்துச் செல்வது வழக்கம் .

அதேபோல் , இந்த ஆண்டு ஐந்து விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு இராஜபாளையம் வடக்கு காவல் நிலையம் அருகே உள்ள தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் கோவில் பகுதியில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்வதற்காக ஐந்து விநாயகர் சிலைகளையும் டிராக்டர் மூலம் எடுத்து வரப்பட்டன.

இந்த விநாயகர் சிலை எடுத்து வருவதை, சாலையில் சென்ற பொதுமக்கள் பக்தியுடன் பார்த்தும் தங்கள் கைபேசியில் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.இன்று முதல் விநாயகர் சதுர்த்தி வரை பல்வேறு பூஜைகள் மற்றும் இலவச திருமணம் நலத்திட்ட உதவிகள் என ஒவ்வொரு நாளும் விழாவாக நடைபெறும் இதை தொடர்ந்து நாள்தோறும் அன்னதானமும் நடைபெறும்.

Tags

Next Story