விருதுநகர் அருகே பள்ளியில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா

மல்லாங்கிணறு அரசுப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டியை மாணவிக்கு வழங்கிய அமைச்சர் தங்கம்தென்னரசு
விருதுநகர் அருகே அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த இலவச மிதிவண்டித் திட்டம் முக்கிய பெண்களின் கல்வியை ஊக்குவிப்பதற்காக கடந்த 2001ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அத்துடன் இந்த திட்டம் உயர்நிலைக் கல்வி படிக்கும் எஸ்.சி, எஸ் டி பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
இது மாணவர்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்றதால் 11ம் வகுப்பு அனைத்து பயிலும் மாணவர்களுக்கும், ஐடிஐ மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்று இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. அத்துடன் இதனை பெறுபவர்கள் தமிழகத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். மேலும் மாணவர்கள் அரசு அல்லது அரசு உதவி பெறும் அல்லது பகுதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவராக இருக்க வேண்டியது முக்கியமானதாகும். . அதன்படி 2021-2022ம் ஆண்டு கல்வியாண்டில் மிதிவண்டி வழங்கும் திட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 11ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஐடிஐ மாணவர்களுக்கும் வழங்கப்படுமென அரசு அறிவித்தது.
இதையடுத்து முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார், இதன் மூலம் நடப்பாண்டில் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 6.35 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படவுள்ளது.
அதன் தொடர்ச்சியாக விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கி பேசியதாவது: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவி புரிய பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக தமிழ்நாடு அரசு இலவச மிதிவண்டித் திட்டம் தொலைதூர மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கிறது. ஏனெனில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் பெரும்பாலும் கிராமங்களில் இருந்து வருவதால் அவர்களிடம் மிதிவண்டி இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்த இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம் தொலைதூர மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்றார் அமைச்சர் தங்கம்தென்னரசு. இதில், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu