சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து
X

கோப்பு படம்

சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் சங்கரேஸ்வரன். இவர் சிவகாசி - சாத்தூர் சாலையில், புஸ்வானம் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் அலுமினிய சீவுதூள் அரைக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கம் போல வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த சீவுதூள் தீப்பற்றி எரிந்தது.

விபத்து ஏற்பட்டவுடன் தொழிலாளர்கள் அனைவரும் ஆலையை விட்டு பத்திரமாக வெளியேறினர். விபத்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். சரியான நேரத்தில் தொழிலாளர்கள் ஆலையை விட்டு வெளியேறியதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!