ராஜன் செல்லப்பாவிடம் வாழ்த்து பெற்ற தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்
விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் ராஜன் செல்லப்பா எம்எல்ஏவிடம் வாழ்த்து பெற்றார்.
விருதுநகர் நாடாளுமன்ற அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரன் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ.வும், மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் ராஜன் செல்லப்பா கூறியதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆற்றல்மிகு பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியாரும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தேமுதிக உடைய மறைந்த விஜயகாந்த் அவருடைய வாழ்த்துக்களோடு நம்முடைய இனிய சகோதரர் விஜய பிரபாகரன் தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு, பிரச்சார பணியை நேற்றிலிருந்து தொடங்கி இருக்கிறார்கள்.
தொடர்ந்து, அவருடைய நிர்வாகிகள் விருதுநகர் நாடாளுமன்றம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியின் உண்மையை உணர்வோடும் இந்த தேர்தல் பணிகளை மக்களை சந்திக்கிற பணியினை தொடர்ந்து நிர்வாகிகள் குறிப்பாக விருதுநகர் நாடாளுமன்றம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் மிகப்பெரிய வெற்றி தருகின்ற நம்பிக்கையோடும் உண்மையான உணர்வோடும் இந்த பணிகளை தொடங்கி இருக்கிறோம்.
ஏற்கனவே, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அண்ணா திமுக வெற்றி வாய்ப்பு இழந்தன.ஆகவே நிச்சயமாக இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது மக்களுக்கு ஏற்படுகின்ற எதிர்ப்பை பயன்படுத்தி மக்கள் விரோத சக்தியை இன்றைக்கு மக்கள் புரிந்து கொண்டு விட்ட காரணத்தால் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக கூட்டணி வேட்பாளராக இனிய சகோதரர் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். விருதுநகர் நாடாளுமன்றம் நமக்கு ஒரு மிக முக்கியத்துவமான நாடாளுமன்றமாக தொகுதி.
இன்றைக்கு பல்வேறு திரைப்படங்களில் மட்டுமல்ல மக்களிடமும் நல்ல அன்பை பெற்று இருந்த மதிப்பிற்குரிய விஜயகாந்த் உடைய செல்வன் விஜய பிரபாகரன் போட்டியிட மிக நல்ல வாய்ப்பாக நாங்கள் கருதுகிறேன்.
இளைஞராக அவருடைய பணி சிறப்பான பணியாக அமையும் என்று அனைத்திந்திய அண்ணா திமுக கருதுகிறது. விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் மதுரை மாவட்டத்தில் இரண்டு தொகுதிகள் ஏற்கனவே இருக்கின்றன அதில், திருப்பரங்குன்றம் திருமங்கலம் தொகுதிகள் ஏற்கனவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக 30 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பினை கொடுத்தார்கள்.
அருகாமையில் உள்ள திருமங்கலம் சட்டமன்ற தொகுதியிலே முன்னாள் அமைச்சர் உதயகுமார் 15 ஆயிரம் வாங்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது கிராமத்து மக்கள் மிகுந்த பற்று கொண்டவர்கள். எனவே நிச்சயமாக கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.
வேட்பாளரின் அன்னையார் குறிப்பிட்டது போல் 2011 முதல் ராசியான கூட்டணி இது நாளை மறுதினம், எடப்பாடி பழனிசாமி சிவகாசியிலே விஜய பிரபாகரனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார். அவருடைய கருத்துக்கள் மக்கள் மத்தியிலே ஈர்ப்பு சக்தியை பெற்றுள்ளது. மக்களிடம் நடக்கக்கூடியதை செய்யக்கூடியதை எடுத்துக் கூறுகிறோம்.
திமுகவின் தவறுகளை சுட்டிக் காட்டுகிறோம் நிச்சயமாக விருதுநகர் நாடாளுமன்றம் மதுரை நாடாளுமன்றம் மற்றும் சிவகங்கை நாடாளுமன்றம் ஆகியவற்றில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் .
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து வேட்பாளர் விஜயபிரபாகரனிடம் அப்பா இல்லாத நிலையில் எவ்வாறு அரசியலை பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு?
அப்பா இல்லாதது எங்களுக்கு மிகப்பெரிய பலவீனம் தான். எங்க அப்பா இல்லாத நேரத்தில் அவர் சம்பாதித்த பேரும் புகழும் எங்களுக்கு நிச்சயம் உதவி செய்யும் நிச்சயமாக நாங்கள் அமைத்து இருக்கின்ற கூட்டணி மிகப்பெரிய கூட்டணி. அப்பா இல்லாத நேரத்தில் அண்ணன் மாதிரி முக்கியமானவர்கள் தகப்பன் ஸ்தானத்தில் இருந்து எங்களுக்கு உழைக்க தயாராக உள்ளனர். அவர்களது வழிகாட்டலில் அப்பாவின் கனைவ நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றார்.
விருதுநகர் தொகுதியில் அடிப்படை பிரச்சினைகள் குறித்து அறிந்து கொண்டீர்களா என்ற கேள்விக்கு? எல்லாவற்றிற்கும் தயாராகவே இருக்கிறோம். நேற்று தான் வேட்பு மனு தாக்கல் செய்தோம் இன்னும் டீப்பா தொகுதிக்குள் செல்ல செல்ல தான் முழுமையான குறைகள் தெரியும். நிச்சயமாக என்னென்ன குறைகள் உள்ளது என்று தெரிந்து அவற்றை பூர்த்தி செய்ய தயாராக உள்ளோம்.
கேப்டனின் மகனாக இருந்து பொதுமக்களின் குறைகளை தீர்க்க சிறந்த முறையில் தீர்த்து வைக்க உள்ளோம் என்றார்.
ராதிகா சரத்குமார் உங்களை மகன் என்று கூறியது குறித்த கேள்விக்கு?
நானும் ராதிகா மேடம் மகளும் சிறுவயதில் இருந்து ஒரே பள்ளியில் படித்து வந்துள்ளோம். அவர்களிடம் பேசி உள்ளோம். பழகியுள்ளோம். நிச்சயம் அவர்கள் கூறியது போல் மகன் என்று கூறுவது ஏற்கக் கூடியது தான். இது நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் ஓட்டாக மாறுமா என்று தெரியவில்லை. சரத்குமார் சார் கேப்டன் மூலமாகத்தான் அறிமுகமானார். புலன் விசாரணை படத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார் .
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செங்கல்லை காட்டி உதயநிதி பிரச்சாரம் செய்கிறாரே என்ற கேள்விக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கூறியதாவது:-
விருதுநகர் நாடாளுமன்றத் தேர்தலில் விஜய பிரபாகரன் நாடாளுமன்றத் தொகுதியில் என்னென்ன பணிகள் நடைபெற வேண்டி உள்ளது என்பதை சுட்டிக்காட்டி உள்ளோம்.
எய்ம்ஸ் மருத்துவமனை விருதுநகர் நாடாளு மன்றத்தில் திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ளது.
மதுரை விமான நிலையம் திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் , வடபழஞ்சி ஐடி பார்க் முக்கியமானவை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குள் வருகிறது.
மதுரை விமான நிலையம் போன்றவை வளர்ச்சி அடைய வேண்டும். மதிப்பிற்குரிய உதயநிதி அவர்கள் ஒரு செங்கலை தூக்கி காண்பிக்கிறார் ஒரு நாகரிகமான அரசியல்வாதியாக பேசுவதற்கு உதயநிதியை பார்க்க நினைக்கிறோம். ஆனால், ஒரு முதலமைச்சரின் மகன் முன்னாள் முதலமைச்சரின் பேரன் செங்கல என்ன பண்ணீங்க என்று எடப்பாடியாரை பார்த்து கேட்கிறார்.
நீங்கள் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகிறது. செங்கலை தூக்கி என்ன செய்துள்ளீர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். மத்திய அரசிற்கு என்ன கோரிக்கை வைத்தீர்கள்.
தவறான வார்த்தையை பயன்படுத்துவது அவருக்கு நாகரிகம் அல்ல நாங்கள் எல்லாம் சட்டமன்றத்தில் அவர் அறிவித்தது போல் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 3 மினி விளையாட்டரங்குகள் அமைப்போம் என கூறினார் .
மூன்று கோடி ரூபாய் செலவில் 234 தொகுதிகளில் கிரவுண்ட் கொண்டுவருவேன் என கூறினார் ஆனால், இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நான் சட்டமன்றத்தில் கேள்வி கேட்டதற்கு அப்புறம் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை எந்த கிரவுண்டும் அமைக்கவில்லை இதற்காக நாங்கள் கைப்பந்து தூக்கலாமா? சாதாரண விளையாட்டு அரங்கை அமைக்க முடியாத இந்த அரசு எய்ம்ஸ் பற்றி பேசுவதற்கு தகுதியில்லாத அரசு.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu