சாத்தூர் அகழாய்வில் சங்கு வளையல் கண்டுபிடிப்பு

இங்கு வாழ்ந்த மனிதர்கள் சங்கு வளையல் தயாரிப்பு கூடம் அமைத்திருப்பதற்கான சான்றுகளாக இவை கிடைத்துள்ளது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சாத்தூர் அகழாய்வில் சங்கு வளையல் கண்டுபிடிப்பு
X

சாத்தூர் அருகே அகழாய்வில் சங்கு வளையல்கள், சுடுமண் அச்சு கண்டெடுக்கப்பட்டது

சாத்தூர் அருகே அகழாய்வில் சங்கு வளையல்கள், சுடுமண் அச்சு கண்டெடுக்கப்பட்டது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் - வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம், மேட்டுக்காடு பகுதியில் 2ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை நடைபெற்ற அகழாய்வில் 3 ஆயிரத்து 650க்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது கருங்கல் சுவர்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தப் பகுதியில் வசித்த முன்னோர்கள் கருங்கற்களினால் ஆன சுவர்களால் வீடுகள் கட்டி குடியிருந்திருந்ததை அறிய முடிகிறது. மேலும், வெள்ளை மற்றும் நீல நிறத்தினால் ஆன சங்கு வளையல்கள் மற்றும் சங்கு வளையல்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் சுடுமண் அச்சு ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கு வாழ்ந்த மனிதர்கள், சங்கு வளையல் தயாரிப்பு கூடம் அமைத்திருப்பதற்கான சான்றுகளாக இவை கிடைத்துள்ளது. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தொன்மையான தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் கடந்த ஆண்டு மார்ச் 16ஆம் தேதி முதலாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன. 16 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு மேற்கொள்ளப் பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் இறுதி வரை இப்பணிகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து 2ம் கட்ட வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 2ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் தங்க அணிகலன், ஆண் உருவ சுடுமண் பொம்மை, யானை தந்த பகடைக்காய், சுடுமண் அகல்விளக்கு, சுடுமண் வணிக முத்திரை சுடுமண்ணால் ஆன வட்ட வடிவ தட்டு, சுடுமண் அணிகலன், பச்சை மற்றும் வெள்ளை நிற பாசி மணிகள் உள்ளிட்ட எண்ணற்ற வகையிலான தொன்மையான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Updated On: 6 Sep 2023 2:30 PM GMT

Related News