விஏஓ படுகொலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

விஏஓ படுகொலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X

கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்துபிரான்சிஸ், மனல் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட படுகொலையை கண்டித்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பத்மநாதன், தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு வருவாய்துறை ஊழியர் சங்க விருதுநகர் மாவட்ட செயலாளர் வட்டாட்சியர் கண்ணன்,தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்க மாநில பொருளாளர் நாகப்பன்,நேரடி நியமன உதவியாளர் அலுவலர் சங்க நிர்வாகி மாரீஸ்வரன்,வருவாய் துறை அலுவலர் சங்கம் முன்னாள் மாநில செயலாளர் வட்டாட்சியர் பொன்ராஜ்,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் ச.இ.கண்ணன் ,தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை மாவட்டத்தலைவர் ராஜகோபால்,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வைரவன் ,தமிழ்நாடு வருவாய்த்துறை சங்க மாவட்டத்தலைவர் கோதண்டராமன்,தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தின் அமைப்பு செயலாளர் காசிமாயன்,மாவட்ட ம்பொருளாளர் மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai future project