சாத்தூர் அருகே நாய் கடித்து மான் பலியானது

சாத்தூர் அருகே  நாய் கடித்து  மான் பலியானது
X

நாய் கடித்து பலியான புள்ளி மான்

சாத்தூர் அருகே, நாய்கள் கடித்து புள்ளிமான் பலியான சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் காப்புக் காடுகள் உள்ளன. இவற்றில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. அவ்வப்போது காட்டுப் பகுதியிலிருந்து மான்கள் ஊருக்குள் நுழைந்துவிடும். அப்படி ஊருக்குள் வந்த புள்ளிமான் ஒன்றை, அந்தப்பகுதியிலிருந்த தெருநாய்கள் விரட்டி கடித்துள்ளன. நாய்கள் கடித்ததால் காயமடைந்த புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற வனத்துறை ஊழியர்கள், புள்ளிமான் உடலை மீட்டு அந்தப்பகுதி கண்மாய்கரை பகுதியில் புதைத்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி