சாத்தூரில் சூறாவளி காற்று:60 ஆண்டுகால பழமையான மரம் வேரோடு சாய்ந்தது

சாத்தூரில் சூறாவளி காற்று:60 ஆண்டுகால பழமையான மரம் வேரோடு சாய்ந்தது
X

சாலையில் சாய்ந்த 60 ஆண்டு பழமையான மரத்தை அப்புறப்படுத்தும் பணி.

சாத்தூரில் வீசிய சூறாவளி காற்றுக்கு 60 ஆண்டுகள் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது.

சாத்தூரில் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் பைவப்பாற்றின் கரையில் நகராட்சிக்கு சொந்தமான சொக்கலிங்கம் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் பழமையான மரங்கள் நிறைந்து உள்ளது. இந்நிலையில் சாத்தூரில் நேற்று பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் சாலையின் ஓரத்தில் இருந்த சுமார் 60 ஆண்டுகால பழமையான வேப்ப மரம் வேரோடு சாய்ந்து தேசியநெடுஞ்சாலை சர்வீஸ் ரோட்டின் குறுக்கே விழுந்தது.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது. உடனே அருகில் இருந்தவர்கள் சாத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கருவிகள் கொண்டு மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன்பிறகு போக்குவரத்து சிரானது. மரம் சாய்ந்து விழுந்ததால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்