அதிக பட்டாசுகளை இருப்பு வைத்திருந்ததாக மூன்று கடைகளுக்கு சீல்

அதிக பட்டாசுகளை இருப்பு வைத்திருந்ததாக மூன்று கடைகளுக்கு சீல்
X

அதிக பட்டாசுகளை இருப்பு வைத்திருந்ததாக, மூன்று கடைகளுக்கு சீல்

சிவகாசி அருகே, அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பட்டாசுகள் இருப்பு வைத்திருந்த, 3 பட்டாசு விற்பனை கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்

சிவகாசி அருகே, பட்டாசு விற்பனை கடைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பட்டாசுகள் இருப்பு வைத்திருந்த 3 பட்டாசு விற்பனை கடைகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, அய்யப்பன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (50). இவர் சிவகாசி - சாத்தூர் சாலையில் உள்ள பாறைப்பட்டி பகுதியில் பட்டாசு விற்பனை கடை வைத்துள்ளார். மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்று இயங்கும் இந்த பட்டாசு விற்பனை கடையில், உரிமம் பெற்ற அளவை விட கூடுதலாக பட்டாசுகள் இருப்பு வைத்திருந்தது வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்தது.

மேலும் பாறைப்பட்டி, திருப்பதி நகரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் பட்டாசு விற்பனை கடையிலும், பட்டாசுகள் உரிமம் அளவை விட கூடுதலாக இருப்பு வைத்திருந்தது தெரிய வந்தது. மீனம்பட்டி, நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த லட்சுமணப்பெருமாள் (50) என்பவரின் பட்டாசு விற்பனை கடையிலும் அளவுக்கு அதிகமாக பட்டாசுகள் இருப்பு வைத்திருந்ததும் அதிகாரிகள் ஆய்வில் தெரிந்தது.

இதனையடுத்து அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்த 3 பட்டாசு விற்பனை கடைகளுக்கும், வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இது குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் புகார் தெரிவித்தனர்.

புகாரின் பேரில் பட்டாசு விற்பனை கடை உரிமையாளர்கள் 3 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!