திருத்தங்கல் பெருமாள் கோயிலில் ஆனி பிற்மோற்சவ விழா

திருத்தங்கல்  பெருமாள் கோயிலில் ஆனி பிற்மோற்சவ விழா
X

திருத்தங்கல் ஸ்ரீநின்றநாராயண பெருமாள் யானை வாகனத்தில் எழுந்தருளினார்.

108 வைணவ ஸ்தலங்கலில் ஒன்றான ஸ்ரீநின்றநாராயண பெருமாள் கோவிலின் ஆனி பிரமோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது

திருத்தங்கல் ஸ்ரீநின்றநாராயண பெருமாள் யானை வாகனத்தில் எழுந்தருளினார். ஆனி பிரமோற்சவ தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்லில், பிரசித்தி பெற்ற 108 வைணவ ஸ்தலங்கலில் ஒன்றான ஸ்ரீநின்றநாராயண பெருமாள் கோவிலின் ஆனி பிரமோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. ஸ்ரீநின்றநாராயண பெருமாள் யானை வாகனத்தில் எழுந்தருளி ரதவீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். முன்னதாக கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் சிவகாசி மாநகராட்சி துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், 6வது வார்டு கவுன்சிலர் ஸ்ரீநிகா சீனிவாசப்பெருமாள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆனி பிரமோற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நாளை காலை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், திருவிழா குழுவினர் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு