காரியாபட்டி அருகே கூட்டுறவு சங்க தலைவர் பதவி ஏற்பு

காரியாபட்டி அருகே கூட்டுறவு சங்க தலைவர் பதவி ஏற்பு
X

கூட்டுறவு சங்க தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற செல்வத்திற்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

காரியாபட்டி அருகே கூட்டுறவு சங்க தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற செல்வம் பதவி ஏற்றுக்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம் ,காரியாபட்டி ஒன்றியம் சத்திரம் புளியங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. கூட்டுறவு வங்கி தேர்தல் அதிகாரி ராஜ்குமார் முன்னிலையில் நடந்த தேர்தலில், ஆர்.செல்வம் தலைவராகவும், துணைத்தலைவராக மந்திரி குமார் தேர்வு செய்யப்பட்டனர்.

சங்க நிர்வாகஸ்தர்களாக காசி, சுப்பிரமணி, பால்ராஜ், பரமேஸ்வரி செல்லம்மாள், அழகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டுறவு வங்கி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வத்துக்கு, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன், மாவட்டக் கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், பேரூராட்சித் தலைவர் ஆர்.கே.செந்தில்,, ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா ராம்பிரசாத், வங்கி செயலாளர் பாலகிருஷ்ணன் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
ai based agriculture in india